கில்லி டைரக்டர் தரணி பரணி என்ற பெயரில் இயக்கிய முதல் படம். ”எதிரும் புதிரும்” நெப்போலியன், மம்முட்டி நடித்த சந்தனகடத்தல் வீரப்பனை பேஸ் பண்ணிய படம். பொருளாதார பிரச்சினைகளால் ரிலிஸ் தள்ளிக்கொண்டே போக கேபிள் டிவியில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓட்டிவிட்டார்கள். யாருக்கோ வந்த பிரச்சினைதானே என திரையுலகம் தெனாவெட்டாக இருந்ததன் எதிரொலி இப்போது நடிகர் சங்கத்தலைவர் படத்தையே (ஜக்குபாய்) நெட்டில் போட்டு விட்டார்கள்.
ஆனந்த விகடன்
கெளதம் மேனன்
எனக்கு சுப்ரமணியபுரம் பிடிச்சது. ஒர் அறிமுக இயக்குனர் சசிகுமார் செய்தது பெரிய சாதனை. அதை ஒத்துக்கிட்டே ஆகனும், ஆனா ஏன் சசிகுமாரை அவ்வளவு தூக்கிவெச்சுக் கொண்டாடுறாங்கனு தெரியலை. என்னாலேயும் அரிவாள் ரத்தத்தோடு, நேட்டிவிட்டியோடு கதை சொல்ல முடியும். எனக்கு இந்த அமீர் மேலே இருந்த மரியாதையே போய்விட்டது. இவ்வளவு பேச்சு பேசிட்டு ”யோகியை” எடுத்தது தப்பு. "TsoTs1" எடுக்க அமீர் எதுக்கு? அவர் யோசிக்கனும்.
ஜீனியர் விகடன்
ஷகீலா
என்னோடு தம்பி சலீமுக்கு சதீஷ் ப்ரெண்ட். அவர் நிறையத்தடவை எங்க வீட்டுக்கு வந்திருக்கார். அப்பயெல்லாம் அவர் மீது காதல் ஈர்ப்பு ஏற்படலை, ஒரு தடவை சூட்டிங்குக்காக நானும், தம்பியும் துபாய்ல இருந்தோம். அந்த சமயம் பார்த்து எங்கம்மாவுக்கு ரொம்ப சீரியஸ் அதை வேலைக்காரங்க முலம் கேள்விப்பட்டு ஓடிவந்து, ஹாஸ்பிட்டலில் சேர்த்து அம்மா உயிரைக் காப்பாற்றினார் சதீஷ். 3 வருஷமா அவர் எனக்கு பழக்கமாயிருந்தும் அந்த நொடியில்தான் காதல் ஏற்பட்டது.
கன்னட பத்திரிக்கை
ரஜினி
விஷ்ணுவர்த்தனுக்கும் எனக்கும் 32 ஆண்டுகள் நட்பு தொடர்ந்தது. நான் தமிழ் திரையுலகில் சாதனை படைக்க விஷ்ணுவே காரணம். கன்னட திரையுலகில் அவர் கொடிகட்டிப்பறந்த காலத்தில் ”சகோதர சவால்” படங்களில் இனைந்து நடித்தேன். அப்போது பாலசந்தர் இயக்கத்தில் தமிழில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. கன்னட திரையுலகமா?, தமிழ் திரையுலகமா? எனக்கு குழப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஷ்ணுவிடம் ஆலோசனை கேட்டேன். கன்னடத்தை சேர்ந்த ஒருவர் தமிழ் திரையுலகில் சாதனை படைக்க வேண்டும், வெளியில் சாதித்தால்தான் நமக்கு பெருமை என தோழில் தட்டி உற்சாகமூட்டினார். அவர் எனது ஒவ்வொரு வளர்ச்சியிலும் அக்கரைக்கொண்டவர்.